Wednesday, 27 October 2010

பதிகம் 130

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா ருட்செய்வன் ஆதி யரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்



உரை (செந்தில்வேல்)
நாம் இன்று அறிவு என்று கூறுவது நம் ஐய்ம்புலன்களால் நாம் உணர்தவையும் மற்றவர்கள் நமக்கு உணனர்துயவையும் ஆகும். அனால் இந்த அறிவால் சிவனை காணும் பேரு கிட்டபோவதில்லை. ஆனாலும் இந்த சிட்ட்றறிவு கொண்டவர்களையும் தன்னை காணும் படி செய்ய அருள் புரிபவன் , உமையவள் காண நடனம் ஆடிடும் , மாணிக்கம் போன்ற ஒளி பொருந்திய சிவனே ஆகும்.

உமையவள் என்பவள் இந்த உலகத்தில் உள்ள இன்பங்களை அளிப்பவள். அவளுக்குகாக நடனம் புரிந்திடும் சிவன் உலக அறிவு மட்டுமே கொண்ட மாநிடர்க்களும்மும் அருள் புரிவான் என்ற உவமை இங்கு வெளிப்படுகின்றது.



உரை(ஜோ விநிப்றேத்) உரைப்பார் - காத்திருக்கவும்



உரை( சௌமியா) உரைப்பார் - காத்திருக்கவும்



உரை(அரவிந்தன்)
மனிதனின் அறிவின் திறன் எல்லைக்கு உட்பட்டது, அதை கருவியாக கொண்டு உண்மையை உணர இயலாது. எனினும் இறைவன் உண்மையை மனிதனின் அறிவுக்கு அறியும் படி உணர செய்வான்.


ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்

மேற்காணும் இறுதி இரண்டு அடிகளில் திருமூலர் குண்டலினி சக்தியை குறிபிடுகிறார். சக்தி எனும் குண்டலினி மூலாதாரத்திலிருந்து சிவமாகிய அக்கியைகு சென்று சேருவதை விளக்கி உள்ளார்.





No comments:

Post a Comment