தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் சிவபோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் நிலை சொல்வதெவ்வாறே
உரை (செந்தில்வேல்):
தூக்கம் என்பதை தவம் அல்லது தியானம் என என்ற பொருள் கொள்ளலாம். அவ்வாறு ஆழ்ந்த தவத்தினால் முதல் படியான சிவலோகம் என்கிற, அமைதியே பொருளான இடத்தை தன் மனதுள்ளே காணலாம். சிவலோகம் மட்டும் அல்லாமல் உண்மையை அடையும் யோகத்தையும் , உண்மையான இன்பத்தையும் தனக்குள்ளேயே காணலாம்.
உரை(ஜோ விநிப்றேத்) உரைப்பார் - காத்திருக்கவும்
உரை( சௌமியா) உரைப்பார் - காத்திருக்கவும்
உரை (அரவிந்தன்):
சிறு குறிப்பு:
தூங்கிக்கண்டார் - தியானத்தினால் காண்பது / கனவில் காண்பது / புறத்தில் இருந்து விலகிநின்று காண்பது / இறந்தபின் காண்பது
சிவலோகம் - கைலாயம் / வெற்றிடம் / நல்இருள் / இமாலையம்/ ஒலி
தம்முள்ளே - மனதினுள்ளே / மனிதனின் உள்ளே
விளக்க உரை :
சிறந்த தியானத்தால் சிவலோகத்தை மனதினுள்ளே காணமுடியும்
சிறந்த தியானத்தால் சிவயோகமும் மனதினுள்ளே காணமுடியும்
சிறந்த தியானத்தால் ஷிவபோகமும் மனதினுள்ளே காணமுடியும்
சிறந்த தியானத்தில் இருப்பவர்களின் நிலை சொற்களால் உரைக்க இயலாது.
No comments:
Post a Comment